யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு (18-07-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முகத்தை துணியால் மறைத்தவாறு இரு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெற்றோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது, வீட்டிலிருந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.