“எல்லோரையும் ஏற்றுக்கொள்வோம் மனிதநேயத்தை மேம்படுத்துவோம்”

யாழ். மாவட்ட சர்வமத செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் யாழில் இன்று அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தது.

அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(20-06-2023) காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக ஊர்வலம் நூலகத்தை வந்தடைந்தது.

இதன்போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச. செந்தூராசா மற்றும் நான்கு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி மதகுருமார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN