பிரித்தானியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று பிற்பகலில் இடம்பெறும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவை மையப்படுத்திய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கெடுக்கும் நிலையில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் குறித்த நிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு அருகில் இன்று மாலை இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தின், போது ‘எமது தேசம் தமிழீழம் ரணிலே வெளியேறு” எனும் கோசங்களை எழுப்பி தமது எதிர்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

Recommended For You

About the Author: webeditor