இதய நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால் மக்கள் முகக்க கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் தொடர்பான நிபுணர் டாக்டர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடு
இலங்கையில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இந்நிலைமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது கூடுமான வரை முகக்கவசம் அணிந்துகொள்வது சிறந்தது.
மேலும் காற்று மாசுபாடு இதய நோயை மட்டுமல்ல, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றாத நோய்களையும் ஏற்படுத்துகிறதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.