சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தையில் இன்னும் முட்டை தட்டுப்பாடும் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி மூலம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.