இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது.
கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் என எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை ‘ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வரை மாநிலத்தின் பல்வேறு மாாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனக் கணித்துள்ளது.
ரெட் அலட்ர்ட்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் குவாஹாட்டி பிரந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலட்ர்ட்’ விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அசாமின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மாவட்டங்களான கோக்ராஜ்ஹ சிராங் பாக்சா பார்பெட்டா மற்றும் பொங்கைகான் பகுதிகளில் கனமழை மிக அதிகமான கன மழை மழைப்பெய்யக்கூடும்.
அதே நேரத்தில் துப்ரி கம்ருப் கம்ருப் மெட்ரோபாலிட்டன் நல்பரி திமா ஹாசோ கச்சார் கோல்ப்ரா மற்றும் கரிம்கஞ்ச் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைப்பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வெள்ளத்தால் லக்கிம்பூர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தால் 25200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்ருகரில் 3800 பேரும் தின்சுகியாவில் 2700 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் தற்போதைய நிலவரப்படி அசாமில் 142 கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.