நேற்று முன்தினம் ஹட்டன் பொலிசார் மேற்கொண்ட வீதி சோதனையின் போது முறையான அனுமதி பத்திரம் இன்றி 53 மர குற்றிகள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்றைச் சோதனை இட்ட போது 20 மரக் குற்றிகள் ஏற்றிச் செல்ல அனுமதி பத்திரம் வைத்து கொண்டு மேலதிகமாக 33 மரக் குற்றிகள் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்த குற்றத்திற்காக 35 லட்சம் ரூபாய் உறுதி பிணையில் சாரதியையும் பார ஊர்தியை யும் விடுவித்து உள்ளதாகவும் அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் சென்ற 33 மரக் குற்றிகள் குறித்து ஹட்டன் வன இலாகா துறையின் அறிக்கை கோரியுள்ளது.
அதன்படி அந்த அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மற்றும் சாரதி மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு அதிகாரி தெரிவித்தார்.