வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெருந்தொகை கட்டணத்திற்கு போலி விசாக்களை வழங்கும் முகவர்களினால் இந்தநிலை உருவாகிறது. எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு விஎப்எஸ் குளோபல் (VFS GLOBAL) நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 240 நாடுகள் இந்திய மாணவர்களை உயர்கல்விக்காக சேர்த்துக்கொண்டுள்ளன.

பெருமளவிலான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க முன்வருவதால், விசாக்களின் தேவை இதுவரை அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் பலர் தங்கள் வெளிநாட்டுக் கனவுகளை நனவாக்க, போலி முகவர்களின் வலையில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை மாணவ வீசாக்களுக்கான தேவை பொதுவாக மே மாதத்தின் மத்தியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடித்துவரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பு நிறுவனங்கள்
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் 2022ல் 7.5 லட்சத்தை எட்டியுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா உறுதியளிக்கப்பட்ட ஒரு முடிவை கொண்டு தங்களை விசா சேவை வழங்குநர்களாகக் காட்டிக்கொள்ளும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 30,000 முதல் 55,000 ரூபாய்க்கு ஈடாக டெல்லியைச் சேர்ந்த இரண்டு முகவர்கள் மூலம் போலி ஆவணங்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விஎப்எஸ் குளோபல்(VFS Global) நிறுவனத்தின் முத்திரையை போலியாக தயாரித்து ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தமை விசாரணையில் தெரியவந்தது. எனவே இது போன்ற மோசடியான செயல்களிலிருந்து சற்று விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor