கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானசோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வசந்த மண்டப பூசை, அபிஷேகப்பூசை, தம்ப பூசை பூசை என்பன இடம்பெற்றது.
இதில் பல பக்த அடியார்கள் கலந்து கொண்டிந்தனர்.
எதிர்வரும் புதன்கிழமை மாம்பழத்திருவிழா, சனிக்கிழமை வேட்டைத்திருவிழா, ஞாயிற்றுக்கிழமை தேர்திருவிழா, திங்கட்கிழமை ஆனி உத்தர தரிசன தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
உற்சவ பூசைகள் யாவும் மஹோற்சவ கால பிரதம குரு அலங்கார பூசணம். கிரியா சிவஸ்ரீ.சு.வல்லிகாந்தக் குருக்கள்,
ஆகமபிரிவினா, பிரதிஸ்டா சாகரம் ‘வாமதேவ சிவாச்சாரியார், ஆர்ச்சார்ய பூசணம் சிவஸ்ரீ சபா பாஸ்கரக் குருக்கள் ஆகியோரால் இடம்பெற்றது.
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றைக் கொண்ட ஆலமாகும் இங்குள்ள மூல விக்கிரகம் கைலாய மலையில் கொண்டுவரப்பட்ட கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயமாகும் .