யாழில் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (15-06-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடல் சுகயீனம் காரணமாக குறித்த பெண் கடந்த 7ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மூளாய் வேரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜெனார்த்தனன் கனிஷ்ரிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த பெண் மூளை சாவடைந்தே உயிரிழந்துள்ளளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Recommended For You

About the Author: webeditor