சட்டவிரோத கைதுகள் மூலம் எமது உரிமைப் போராட்டத்தை அடக்கி விட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாஷ் உறுதிபட தெரிவித்துள்ளார் .
சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண சுதந்திரநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஜனநாயகப்போராட்டத்தின் போது பொலிஸார் தாக்குதல் நடத்தி அராஜகமான முறையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி க. சுகாஷ் உள்ளிட்ட 18 பேரை கைது செய்து பலமணி நேரங்கள் தடுத்து வைத்திருந்து நள்ளிரவு தாண்டி விடுவித்தனர்.
குறித்த வழக்கு விசாரணையானது இன்றைய தினம்(14.06.2023-புதன்கிழமை) யாழ்ப்பாண நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு 10. 10. 2023 அன்று வரை அடுத்த தவணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.