அமரர் திருமதி மனோன்மணி நாகரத்தினம் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பம் மற்றும் பரிமளம் அறக்கட்டளையின் அறக்கட்டளையின் அனுசரனையுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி – ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாட்டுக்குத் தேவையான பொருட்களையும் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒரு தொகுதி புத்தகப்பைகளையும் வழங்கி வைத்தது.
வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி – ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற இவ் கையளிக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆரம்பக்கல்வித் பகுதித் தலைவர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் கி.வி.விக்கேஸ்வரன், முன்னாளர் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சமூக மேம்பாடு மற்றும் நலிவுற்றவர்களுக்கான வாழ்வாதார செயற்பாட்டுகளுக்கான இணைப்பாளர் வீரசிங்கம் , தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் வ.பார்த்திபன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்