வைத்தியசாலையில் ஏற்படும் குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக “உதிரம் கொடுத்து உயிர்காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று சாய்ந்தமருது USF ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி. அன்வர் தலைமையில் சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் இலங்கை பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் டவலியு.ஜீ.ஏ. எஸ்.தமயந்தி,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.பி. சரத் சந்திரபால, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமிழுள் இலாஹி உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
மேலும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை இரத்தவங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி உட்பட தாதியர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த ரத்த தான நிகழ்வில் சாய்ந்தமருது USF ஸ்ரீலங்கா அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.