சர்வதேச கடல்தின நிகழ்வு

கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை சுற்றாடல் கழகம்மும் எதிர்காலத்துக்குரிய சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய சர்வதேச கடல்தின நிகழ்வு மாணவர் மத்தியில் கடல்சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு அதில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கும்
நிகழ்வு பாடசாலை முதல்வர் திரு.த.தயானந்தன் தலைமையில் கீரிமலை கடற்கரை பகுதியில் இடம்பெற்றதுவிழாவில் பிரதம அதிதியாக கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடல்சார் சுற்றுச் சூழல் அதிகாரி ப.சதீஸ்குமார் கலந்து கொண்டதுடன், விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம்,எதிர்கால சுற்றுச் சூழல் கழகத்திறன் தலைவர் லி.கேதீஸ்வரன் மற்றும் Clean ocean foce இன் வடமாகாணப் பிரதிநிதி ம.சசகரன் ஆகியோரும் கலந்துகொண்டு, பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன

Recommended For You

About the Author: webeditor