லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
அத்தோடு லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.
குறிப்பாக நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கான மூல காரணியாக இருக்கும் அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலை சுத்தப்படுத்துகிறது.
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் லெமன் டீயைக் குடிப்பதால், அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன் குளிர் காலத்தில் லெமன் டீ குடிப்பது சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என கூறப்பட்டு வருகின்றன.
அத்தோடு நாம் சாப்பிடும் உணவுகள் நன்றாகச் செரிமானம் ஆவதற்கு லெமன் டீ பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத சில உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சையில் “குவெர்செட்டின்” உள்ளது, இது ஃபிளாவனாய்டு ஆகும், இது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.