நாட்டின் ஜந்து மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுப்பு!

பதுளை, காலி, கேகாலை, மாத்தளை மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் (NBRO) விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களின் பின்வரும் பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹல்துமுல்ல, ஹாலி எல, பத்தேகம, யக்கலமுல்ல, பல்லேபொல, பசறை, எல்பிட்டிய, நாகொட, கொட்டபொல மற்றும் பஸ்கொட ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலத்தில் வெடிப்பு , இருக்கும் வெடிப்பு விரிவடைதல் மற்றும் நிலம் சரிவு – மரங்கள், மின் கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்திருப்பது போன்ற நிலச்சரிவுக்கு முந்தைய அறிகுறிகளைக் கவனிக்குமாறு NBRO கேட்டுக்கொள்கிறது.

Recommended For You

About the Author: webeditor