இன்றைய இராசிபலன் 15.04.2023

மேஷம்
aries-mesham
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி — இந்த வாரம் புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால். அதை வெளியில் எடுத்துச் செல்ல தடைகள் ஏற்படும். உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து பணத்தை சேமித்து வைப்பது நல்லது. அதைவிட ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். நல்லவர்களுடன் ஏற்படும் தொடர்பால் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும்.

பரணி — இந்த வாரம் உங்களுக்கு தெய்வீக சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி நிலவும். விரும்பிய ஆடை, ஆபரணங்கள், பிடித்தமான நல்ல உணவு, ஆகியவை கிடைக்கும். அறிஞர்கள் நிறைந்த மேடைகளில், கௌரவப் பட்டங்கள் உங்களை அலங்கரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையலாம். டிவி, இன்டர்நெட் ஆகியவற்றைக் கைவிட்டால் முன்னேற்றம். ஏற்படும்.

கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் நீங்கள் தொழில் விஷயமாக தீட்டிய புதிய, முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிகரமாக முடியும். தொடர் முயற்சி செய்தால், வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் தாமதமாகவே கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தடுப்பூசிகளை உடனடியாக போட்டுக் கொள்வது. வியாபாரிகள் தங்கள் புதிய திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். ஆனால், சூழ்நிலை காரணமாக இலாபம் ஓரளவு குறையும். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத் திறனும் கூடும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். பண விஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ரிஷபம்
taurus-rishibum
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தாமதமின்றி தனவரவுகள் வந்து மகிழ்ச்சி தரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும். மாஸ்க் அணிந்து செல்ல மறவாதீர்கள். கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர். அரசு வகைத் தொல்லைகள் இருக்கும். முக்கிய பணிகளில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.

ரோகிணி – இந்த வாரம் வெளியூர் பயணங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி விடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். தாய்வழி உறவுகளால் எவ்வித உதவியும் இருக்காது. உறவினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் காரணமாக பின்னடைவுகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய விரிவாக்கத் திட்டங்களை ஒத்திப் போடுவது நல்லது. நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைய நினைத்தாலும், சூழ்நிலை ஒத்துவராது. மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர் கள். ஆயினும், கவனம் தேவை.

மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். வீட்டில் உறவுகளின் வருகையைத் தவிர்ப்பது நல்லது. தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக் கொள்ளுதல் அவசியம். சிலருக்கு அஜீரண தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேரலாம். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். சூழ்நிலை காரணமாக, அதிகாரிகளுக்கு, பணிச்சுமை கூடும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை.வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் குறைவான நண்பர்கள், மற்றும் உறவுகளோடு சிறப்பாக நடக்கும். சமூக இடைவெளி அவசியம்.

மிதுனம்
gemini-mithunum
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் பொருளாதார நிலை சீராக இருக்கும். தொலை தூர சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் தென்படலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பதவி உயர்வும் எதிர்பார்க்கலாம். பணிச்சுமைகளும் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாமதமாகும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு வீட்டில் திருமணத்திற்கு வரன் தேடும் முயற்சிகளில் முனைப்பாக இறங்குவர். சந்ததி விருத்தி ஏற்படும்.

திருவாதிரை — இந்த வாரம் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத காரியங்களுக்காக அலைய நேரிடும். சிலருக்குக் கையிருப்பு குறைந்து பணமுடைகள் ஏற்படலாம். இடுக்கண் களைய உதவும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். செய் தொழிலில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். வாக்கு வன்மையால் பொருளாதார உயர்வில் ஏற்படும். பூஜை வழிபாடுகள் தடைப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி தவறமால் போட்டுக் கொள்ளுங்கள் அரசு அதிகாரிகளால் சிலருக்குத் தனிப்பட்ட முறையில் நன்மைகள் ஏற்படும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். .

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் வரும் நல்ல செய்திகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். பகைவர்களை வெல்லும் திறன் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அதற்குத் தக்க செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், ஆன்லைன் மூலம் நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைத்துப் புகழும் ஓங்கும். வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலம். ஆதாயம் அடைவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்

கன்னி
virgo-kanni
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்பட்டு, வருமானமும் பெருகும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடித்து அதனால் நல்ல பலனை அனுபவிப்பார்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்களுக்கு சாதகமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால், அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பெண்களுக்கு பணியிடத்தில் மற்றவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.

அஸ்தம் – இந்த வாரம் சகோதரர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். சிலருக்கு எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக் குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள்.

சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் போதிய அளவு தனவரவு அதிகரிப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். எதையும் துணிகரமாக எடுத்து மேற்கொள்ளும் தனித்திறன் உங்களிடம் இருப்பதால் வாழ்க்கையில் உச்சத்துக்குச் செல்வீர்கள். பிள்ளைப்பேறு, தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகள் தயவால் அனுகூலமான பலன்கள்டைவர்

மகரம்
capricorn-magaram
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் — இந்த வாரம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். அதன் காரணமாக அதிகாரிகள் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, உங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு நல்லது . உடல் உபாதைகள் காரணமாகத் தொழிலில் உற்பத்தி பாதிப்புகள் ஏற்படலாம். ஆயினும், எதிர்பார்த்த இனங்களில் எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள். சிலருக்குப் புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்கள் சுலபமான வினாத்தாள் கண்டு மகிழ்ச்சி அடைவார்.

திருவோணம்- இந்த வாரம் எதிர்பாராத விதமாக பணவரவு அதிகரிப்பால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். வழக்குகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தில் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. மனைவி, குழந்தைகளிடம் மனம் விட்டு சிரித்துப் பேசி மகிழுங்கள்.பெண்கள் தங்களை அழகு படுத்தி கொண்டு, அழகை வெளிக்காட்டும் வகையில் பல விழா நிகழ்வுகள் கைகொடுக்கும். சிலருக்கு மாற்றத்திற்கான வாய்ப்புகள் வரலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் உறவுகள் உங்களுடன் மகிழ்ச்சியாகக் காலங்கழிப்பர். அரசுப் பணியில் இருப்பவர்கள், தங்கள் உயர் அதிகாரிகள் மனம் மகிழும் வண்ணம், கடமை உணர்வுடன் செயல் பட்டுப் பாராட்டு பெற முயல வேண்டும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். நல்லவர்களுடன் தொடர்பால் மனம்,உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும்.

கடகம்
cancer-kadagam
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் நீங்கள் அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனைத்து அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும். வாழ்க்கையில் ஏற்படும். முன்னேற்றங்களால் உங்கள் அந்தஸ்து, கௌரவம் கூடும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். மாஸ்க் அணிய மறவாதீர்கள். தடுப்பூசி போடுவது மிக்க அவசியம். நம் ஆரோக்கியம் நம் கையில் சிலருக்கு தொழில் முன்னேற்றங்கள் தடைகளுக்குப் பிறகு, ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டு. உறவுகள் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகளை, தற்சமயம் தள்ளிப் போடுவது நல்லது. கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும்.

பூசம் — இந்த வாரம் கட்டுக்கு அடங்காத செலவுகளால் மன அமைதி குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி, இலாபத்தை அதிகரிக்க நினைத்தாலும். ஊரடங்கு போன்ற பிரச்சனைகளால் பலருக்கும் வருமானக் குறைவு ஏற்படலாம். சிலருக்கு, நாள் போவது யுகம் போவது போல இருக்கும்.மேடைப் பேச்சாளர்கள் உங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உண்ணவும் நேரம் இருக்காது. தாய்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள் செலுத்துவதற்கு தேவையான பணவுதவி கள் வந்து சேரும்.

ஆயில்யம் – இந்த வாரம் உங்கள் பணிபுரியும் இடத்தில் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பார்கள். ஆயினும், புதுப்புது முயற்சிகளால் தனவரவு அதிகரிக்கும். இனிய பயணங்கள் ஆகியவை ஏற்பட்டு சந்தோஷம் தரும். ஆயினும் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க மறக்காதீர்கள். வியாபாரிகளுக்கு வியாபார த்தில் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். மக்களிடம் உங்கள் விற்பனைத் திறமைகளைக் காட்டி வியாபாரத்தில் இலாபத்தை அதிகரித்துக் கொள்ள முயல்வார்கள். அரசு அதிகாரிகள் சந்திப்பு அனுகூலமாக இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக்களிப்பு தரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்குப் பிறகு வெற்றி கிட்டும்.

சிம்மம்
leo-simmam
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் – இந்த வாரம் புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.சிலருக்கு மனசஞ்சலங்கள், மற்றும் அலைச்சல்களும் ஏற்படலாம்.எதிர்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு ஏற்பட்டு மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் சிறு முயற்சிகளில் கூட வெற்றி கிடைக்கும். பெரிய மகான்களின் தரிசனம், அருளாசியும் கிடைக்கும். சிலருக்கு வியாபாரப் போட்டிகள் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் தனித்திறமைகள் புதிய இலக்குகளை எட்டி அதிக இன்சென்டிவ், பாராட்டு பெறுவர். பணிபுரியும் சிலருக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.

பூரம் – இந்த வாரம் சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்தி மயமாக கழியும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும். சுறுசுறுப்பாக பணிபுரிந்து, கடுமையாக உழைத்து, இலக்கை எட்டுவீர்கள். காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் தங்கள் திறமைகளைக் காட்டி பல சாகசங்களை நிகழ்த்துவர். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் மனக்கசப்புகள் தவிர்க்கலாம். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்து சென்றால் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்.

உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். வீட்டில் திருமணம் போன்ற இனிய சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாக சந்தோஷம் பொங்கும். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகள் தள்ளி போகலாம். பெண்களால் இலாபம் ஏற்படும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் தடைபடும். தொழில் வளர்ச்சிகள் தடைப்படும்.

துலாம்
libra-thulam
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். அன்பு நண்பர்களும், பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். அதன் காரணமாக மட்டுமே அதிக இலாபமும், அதிக பலன் கிடைக்கும். காலத்துக்குத் தக்க நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள். வராத உறவுகளின் வருகை மகிழ்ச்சி அளித்தாலும், சமூக இடைவெளியை பேணுங்கள். அவர்களுடன் உணவகங்களில் உணவருந்தி மகிழ முடியாத சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு வீண் அலைச்சல்கள், வீண் செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற சச்சரவுகளை விலக்கி, பணிவுடன் பணியாற்றினால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.

சுவாதி – இந்த வாரம் உங்களுக்கு நல்ல பல ஆன்மிகக் கருத்துக்கள் கேட்பதின் மூலம் ஞான தன்மை அதிகரிக்கும். அரசு வேலைக்கு மனு செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வர தாமதமாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். முக கவசம் அணிய மறவாதீர்கள். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். ஆனால், தாமதப்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேர கால தாமதமாகும். சுபகாரியச் செலவுகள் ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். புதிய தொழில் முயற்சிகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சிலருக்குப் புதிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. கவனம் தேவை. முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் ஆகியவை உயிர் காக்கும்.

மீனம்
pisces-meenam
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபட்டதன் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்கள் புகுத்தி ஆதாயம் காண்பர். இரவு பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியாளர்களின் ஆசைகள் நிறைவேறும். பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும்.

உத்திரட்டாதி- இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை உதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத் திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ரேவதி- இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். ஆழ்ந்த மனக்கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும். குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள் முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும். வியாபார விரிவாக்கத்தால் கிடைக்கும் இலாபம் சிறப்பானதாக இருக்கும்.நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

தனுசு
sagittarius-thanusu
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் – இந்த வாரம் புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் பாக்கியம் தள்ளிப் போகும். கொரோனா காரணமாக பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. அதன் காரணமாக செலவுகள் ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசு பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயம் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும்.

பூராடம் – இந்த வாரம் நல்லதும், கெட்டதும் கலந்த பலன்கள் ஏற்படும் ஆதலால் பக்தி மார்க்க ஈடுபாடு நல்ல பலன் தரும். சாதிக்கத் துடிக்கும் உங்கள் கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றி அனைவரின் பாராட்டையும் பெற்று தரும். உஷ்ணம் காரணமாக உபாதைகள் ஏற்படும். ஆதலால், குளிர்பானங்களை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது. தந்தைக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்குத் தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.

உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் உங்கள் சாதுர்யமான பேச்சால் சம்பாத்தியம் கூடும். உங்கள் மனதில் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் எழும். வியாபாரிகள் தங்கள் விரிவாக்கத் திட்டங்களை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறப்பாக செய்வார்கள். நல்ல உணவு, ஆழ்ந்த தூக்கத்தால் மனதில் நிம்மதி நிலவும். வீட்டில் திருமணம் போன்ற சுப மங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். சுற்றமும், நட்பும் சூழ, சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசு பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன்பெறுவர். நெருங்கிய நண்பர்களின் உதவியால் முன்னேற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்
scorpio-viruchagam
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் அன்பு மனைவியின் ஆதரவால், மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். தெய்வ வாக்கால் வருமானம் பெருகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் ஈடேறும். நட்பு வட்டம் விரிவடையும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் தாமதமாக முடியும். கடன் கொடுத்தவர்களிடம் சுலபமாக கடனைத் திரும்பப் பெற்று விடுவார்கள். மனைவியின் விருப்பப்படி அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பீர்கள். ஆயினும் வரவுக்குள் செலவு களை வைத்துக் கொள்ள முயலுங்கள். முன்னர் கடினமான வேலை, நம்மால் செய்ய முடியாது என ஒதுக்கி வைத்த வேலைகள் எளிதாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும்.

அனுஷம் – இந்த வாரம் நண்பர்களுடன் முக்கிய விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி பொங்க பொழுதைக் கழிக்க நினைத்தாலும் அது கனவாகும். எல்லா வகையிலும் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது. அரசியல்வாதிகளிடம் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் தாமதமின்றி சாதகமாக நிறைவேறும். தொழிலில் புதிய விரிவாக்கம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். மாணவர்கள் அன்றன்றைக்கு உங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதால் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

கேட்டை – இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலர் உயர் ரக வாகனங்களை வாங்க முயற்சி எடுப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். ஆயினும், ஆரோக்கிய நடவடிக்கைகளை எடுக்க மறவாதீர். சுபச்செய்திகள் எதிர்பார்க்கலாம். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை சுலபமாக அடைவீர்கள்.புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.

கும்பம்
aquarius-kumbam
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் எதிர்பாராத தனவரவு மூலம் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். வங்கி நிதி உதவிகள் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். வீட்டில் சிறு மராமத்து வேலைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். உயர் அதிகாரிகளின் அன்பு வட்டத்துக்குள் வந்து ஆதாயம் அடைவீர்கள். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். உங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும்.

சதயம்- இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் இலாபம் பெருகும். பலன் அளிக்கக் கூடிய இனிய பயணங்கள் பலவற்றை மேற்கொள்வீர்கள். உங்கள் திறமைக்கேற்ற, சக்தி மிக்க, அதிகாரமிக்க பதவிகள் உங்களைத் தேடிவரும். நண்பர்கள் நெருங்கிய உறவுகளை அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். அவர்களால் பாராட்டவும் படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பும் தொழில் முன்னேற்றங்களை தரும். அப்போதுதான் உங்கள் கஜானாவும் பணத்தால் நிரம்பும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். அன்பாகத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும்.நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை விவகாரங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.

Recommended For You

About the Author: webeditor