ஏறாவூர் றகுமானியா வட்டாரத்திலுள்ள 155 விதவைத்தாய்மாருக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

ஏறாவூர் றகுமானியா வட்டாரத்திலுள்ள 155 விதவைத்தாய்மாருக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் மற்றுமொரு தொகுதி விதவைத் தாய்மார்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று 13.04.2023 நடைபெற்றது.

நோன்புகாலத்தையிட்டு பிர்தௌஸ் அறக்கட்டளை நிதியத்தினால் இப்பொதிகள் வழங்கப்பட்டன.

நிதியத்தின் ஸ்தாபகத்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாட்டாளருமான ஏஎம். பிர்தௌஸ் தனது சொந்த நிதியிலிருந்து இந்த பொதிகளை வழங்கினார்.

ஏறாவூர் றகுமானியா வட்டாரத்தில் வாழ்வாதாரம் குறைந்த நிலையில் வாழும் 155 விதவைகளில் 35 பேருக்கு முதற்கட்டமாக உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக 65 பேருக்கு பொதிகள் வழங்கப்பட்டன. எஞ்சிய 55 பேருக்கு விரைவில் உலருணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.
பள்ளிவாயல் மூலமாக இதற்கான தெரிவுப்பட்டியல் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினைக்கருத்திற்கொண்டு பண வசதியுள்ள ஏனைய பிரமுகர்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதற்கு முன்மாதிரியாக எமது பணி அமையவேண்டுமென இறைவனைப்பிரார்த்திப்பதாக நிதியத்தின் ஸ்தாபகத்தலைவர் பிர்தௌஸ் இங்கு குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webeditor