களுத்துறை – பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமித கவிரத்னவின் மனைவி மீது வாள்வெட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் பேருவளை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்கு காரணம் என பேருவளை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்