கொழும்பு மத்திய பேருந்து நிலையங்களில் யாசகர்கள் நுழைய தடை!

இலங்கையில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் கொழும்பில் உள்ள கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பேருந்து நிலையங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நடவடிக்கை பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குணசிங்கபுர – பெஸ்டியன் மாவத்தை பேருந்து தரிப்பிடங்களுக்குள் யாசகர்கள் செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்காக பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பேருந்துகளில் நடமாடும் வர்த்தகத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என பேருந்து பணிக்குழாமினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor