12.5 கிலோ கிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என Litro தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தின் அடிப்படையில் புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலை திருத்தம் இதுவாகும் என திரு பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாவின் வலுவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகள் கணிசமான விலை குறைப்புக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.