அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தந்தையான நிக் டேவிஸ் என்பவர் வேலை செய்யவில்லை என்றாலும் மூன்று மனைவிகளுடன் சந்தேகமாக வாழ்ந்து வருகின்றார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான நிக் டேவிஸ் ஏப்ரல், ஜெனிஃபர் மற்றும் டேனியல் ஆகியோரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நிக் ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால், அனைத்து அதிகாரமும் ராணியிடம் உள்ளது. அதனால்தான் எனது அனைத்து அதிகாரங்களையும் ராணிகளுக்கு வழங்கிவிட்டேன் என்கிறார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி ஏப்ரலை ஒரு பல்கலைக்கழகத்தில் தான் சந்தித்தார். இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு, நிக் ஜெனிபரை 2வது திருமணம் செய்கிறார். அதன் பிறகு, டேனியல் மூவரின் வாழ்க்கையிலும் நுழைகிறார்.
4 பேரும் ஒரு வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இரவில் தனது மூன்று மனைவிகளுடன் தூங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் ஒவ்வொரு மனைவியுடனும் தனித்தனியாக தூங்குவதாக கூறுகிறார்.