தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு…

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை – 153,
ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி – 150,
அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் – 148 ,
நுவரெலியா, திருகோணமலை – 147,
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு – 145
கேகாலை 144,

Recommended For You

About the Author: admin