நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கிற பாப்பா நேற்று இரவு காலமானார்.
அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு ஆவார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது நகைச்சுவைகளை விரும்பி பார்ப்பார்கள். அதுமட்டுமல்லாது பல குண்சித்திர வேடங்களிலும் வடிவேலுவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ள திரைப்படங்களும் உள்ளன.
சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இந் நிலையில்திடீரென அவர்து தாயார் மறைவு வடிவேலுவுக்கு பெரும் ப்துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாரை இழந்து தவிக்கும் வடிவேலுவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.