புதிய வாக்களர் எண்ணிக்கை அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின்படி கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 1,833,602 நபர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது 2018ஆம் ஆண்டை விட 109,293 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 13 தேர்தல் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தின் 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 688 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: webeditor