நாட்டில் 15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு
புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்ற நிலையில் 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம் என தெரிவித்த அவர், கிகிச்சை தாமதமானால் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.