ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றன
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி ராமச்சந்திரன் பாபு சர்மா குருக்கள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், சமயப் பெரியார்கள், கல்விமான்கள், அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலரும் பங்கெடுத்திருந்தனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்