அமெரிக்காவில் பனிப்புயலால் மூவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் லூயிஸியானா (Louisiana) மாநிலத்தில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 6 மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்கோன்சின் (Wisconsin), மிச்சிகன் (Michigan), மினசோட்டா (Minnesota), பென்சில்வேனியா (Pennsylvania), வெஸ்ட் வெர்ஜீனியாவில் (West Virginia), வெர்ஜீனியா (Virginia) ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் கிழக்குக் கரையோர மாநிலங்கள் சிலவற்றில் இன்று தொடர்ந்து பனிப் பொழிவுடன் மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பொழிவால் மின் கம்பிகள் சேதமடைந்ததோடு கட்டடங்களும் சரிந்து விழுந்துள்ளது. அதேவேளை ஃபுளோரிடாவிலும் ஜார்ஜியாவிலும் சுழல்காற்று வீசலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor