24.07.2022ஆம் திகதி இரவு 10 மணியளவில் Touquet கடற்கரையில் ஒரு நபர் இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
மருத்துவ உதவி வந்து சேர்ந்த பொழுது அவர் இதய நிறுத்தத்தில் இருந்ததாகவும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இறந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் தனது குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இவர் பாரிசில் வசிக்கும் நபர் என்பதும் தெரியத்தக்கது.