ரஷ்யாவின் நோவோகுய்பிஷெவ்ஸ்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 11 இடங்களில் தீப்பரவல்!
ரஷ்யாவின் சமாரா (Samara) பிராந்தியத்தில் அமைந்துள்ள நோவோகுய்பிஷெவ்ஸ்க் (Novokuibyshevsk) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The New Voice of Ukraine
இத்தாக்குதலைத் தொடர்ந்து ஆலையின் வளாகத்தில் குறைந்தது 11 இடங்களில் பெரும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய வான்பரப்பை இலக்கு வைத்து ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் தொடங்கியதற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட மிகப்பாரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாக இது கணிக்கப்படுகிறது.
The New Voice of Ukraine
பின்னணித் தகவல்கள்:
நோவோகுய்பிஷெவ்ஸ்க் சுத்திகரிப்பு ஆலையானது ரஷ்ய விமானப்படைக்கான ஜெட் எரிபொருள் மற்றும் டீசல் உள்ளிட்ட முக்கிய எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்யும் மிக முக்கியமான கேந்திர நிலையமாகும்.
ரஷ்யாவின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ விநியோக வழித்தடங்களை பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் தனது நீண்டதூர ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

