சர்வதேச கப்பல் கட்டும் சந்தையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் உலகின் சிறந்த கப்பல் கட்டும் நாடாக சீனா இடம்பிடித்துள்ளது.
உயர் தொழில்நுட்பத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட கப்பல் வகைகளுக்கான ஆர்டர்கள் பெருமளவில் சீனா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனாவை சேர்ந்த 6 கப்பல் நிறுவனங்கள் 60 ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகவும், இது உலகளவில் கொடுக்கப்பட்ட ஆர்டர்களில் 70 சதவீதம் என்றும் கூறப்படுகிறது.