இலங்கைச் சைவப்புலவர் சங்க வைரவிழா

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் வைரவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திறந்த போட்டிகளையும் நடாத்தி நடைபெறவுள்ள சைவமாநாடு பட்டமளிப்பு விழாவில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கவுள்ளோம்  விண்ணப்பங்கள் எதிர்வரும் 30.11.2022 இற்கு முன்னர்
சைவப்புலவர்.சி.கா.கமலநாதன்
இல:610,காங்கேசன்துறை
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்
இணுவில்
யாழ்ப்பாணம்.. என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். போட்டிகள் தொடர்பான விதிகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை  saivappulavarsngam1960@gmail.com
என்பதனுடாகவும் மற்றும் அலுவலகத்திலும்  பெறமுடியும் என அகில இலங்கைச் சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்
பின்வரும் போட்டிகள் சரம் கட்டுதல்,மாலைகட்டுதல், பூக்கோலம் போடுதல், தானியக்கோலம் போடுதம், தேங்காய்பூக் கோலம், போடுதல் மாக்கோலம், போடுதல் பூரணகும்பம் வைத்தல் ,புராணபடணம், கதாபிரசங்கம் ,மிருதங்கம், வில்லுப்பாட்டு, நாடகப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. மேலதிக தகவல்களினை 0777197067 ,0779773538 ஆகிய தொலைபேசி இலக்கம் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN