பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார்.
நீதிமன்ற தடை காரணமாக நேற்று வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, அமெரிக்காவுக்கு செல்வதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
வெளிநாடு செல்ல அவருக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற தடை காரணமாக விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், நேற்றைய தினமே நீதிமன்றம் தொடர்பான அந்த சிக்கலை தீர்த்துக்கொண்டு இன்று அவர் அமெரிக்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமெரிக்காவில் திரையிடப்படும் ரஞ்சனின் திரைப்படம்
ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் த கேம் என்ற சிங்கள திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளது. அது தொடர்பான நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.