மின் கட்டணங்களை செலுத்துவதற்கு அரசநிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது!

அரச நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல அரச நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
மின்சாரக் கட்டணம் செலுத்தாமையால் அண்மையில் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor