சீன ஜனாதிபதியின் உரையின் போது தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா ட்ரம்ப்? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில்,
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்களை மூடியபடி அமர்ந்திருந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
உலகின் மிக முக்கியத் தலைவர்களான டொனால்ட் ட்ரம்ப், ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், மிக முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திரச் சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ட்ரம்ப் மற்றும் புட்டின் இடையிலான சந்திப்பு சுமார் 42 நிமிடங்கள் நடைபெற்றதுடன், மூன்று தலைவர்களும் பங்கேற்கும் மும்முனைப் பேச்சுவார்த்தையும் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே திட்டமிடப்பட்டிருந்தது.
இத்தகைய பரபரப்பான சூழலில், ஷி ஜின்பிங் உரையாற்றும்போது ட்ரம்ப் கண்களை மூடியபடி தூக்கக் கலக்கத்தில் இருப்பது போன்ற காட்சிகள் நேரலையில் பதிவாகி, சர்வதேச ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தீவிர விவாதங்களைத் தூண்டியுள்ளன.
எனினும், ட்ரம்ப் உண்மையிலேயே தூங்கினாரா அல்லது கமரா கோணம் மற்றும் குறுகிய நேரக் காணொளிப் பதிவு காரணமாக அவ்வாறு தெரிகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என ஒரு தரப்பினர் விளக்கமளித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உரையாற்றியபோதும், ட்ரம்ப் குறித்து இதேபோன்ற விமர்சனங்களும் சலசலப்புகளும் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

