பிரான்ஸின் முக்கிய அமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் – ஈரான் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு!
பிரான்ஸில் சுமார் 700 சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் குளிர்சாதனக் கட்டுப்பாட்டு அமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில் ஈரானின் புரட்சிகர காவல்படை இருப்பதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது, ஹேக்கர்கள் குளிர்சாதன அமைப்புகளுக்குள் ஊடுருவி அவற்றின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வசதிகளை மாற்றியமைத்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக உணவுப் பொருட்கள் சேதமடைந்ததுடன், சில வர்த்தக நிலையங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுடன் ஈரானைத் தொடர்புபடுத்துவதற்கு பாரசீக மொழித் தடயங்கள், ஈரானுடன் தொடர்புடைய இணைய முகவரிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

