மொஸ்கோவில் கத்தார் அமீரைச் சந்தித்தார் ஈரான் ஜனாதிபதி!
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, ஈரான் ஜனாதிபதி டாக்டர் மசூத் பெஷெஷ்கியானைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மொஸ்கோவில் நடைபெறவுள்ள எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் மன்றத்தின் (GECF) எட்டாவது உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, அமீரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், ஹோர்முஸ் நீரிணையின் நிலவரம், எரிசக்தி விநியோகம் மற்றும் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பில் கத்தார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி உள்ளிட்ட உயரதிகாரிகளும், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

