9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கை சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த சர்வதேச வரவேற்பு

9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கை சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த சர்வதேச வரவேற்பு

கத்தார் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பான UNCTAD-உம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கையின் சுற்றுலாத்துறை முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வெற்றிகரமாக விளக்கமளிக்கப்பட்டது.

 

‘இலங்கை சுற்றுலாத்துறை 2026: நிலையான முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற விசேட அமர்வில் பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் சுரங்க லியனபத்திரண ஆகியோர் உரையாற்றினர்.

 

இதில் கற்பிட்டியில் ஆடம்பரத் தீவு விடுதிகள், தெத்துவவில் சூழலியல் சுற்றுலா, மற்றும் கிழக்கிலங்கையில் சர்வதேச முதலீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 100% வெளிநாட்டு உரிமை மற்றும் விரைவான அனுமதி நடைமுறைகள் வழங்கி இலங்கையைக் முன்னணி முதலீட்டு மையமாக நிலைநிறுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Recommended For You

About the Author: admin