( யாழ். நிருபர் ரமணன் )
கிளிநொச்சி அக்கராயனில் (20.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று (21.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 60.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இன்று தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் அச்சுவேலியில் 33.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நெடுந்தீவில் 24.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 23.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 18.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
கிளிநொச்சியில் 45.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இரணைமடுவில் 43.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், ஆனையிறவில் 29.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன – என்றார்.