இஸ்ரேலுக்கு எதிரான முழுமையான ஆயுதத் தடை:!!
லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் லண்டன் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் மீது முழுமையான தடைகளை விதிக்குமாறும், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை
பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக முழுமையாக நிறுத்தி ஆயுதத் தடையை (arms embargo) அமுல்படுத்த வேண்டும்
எனவும் பேரணியில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாலஸ்தீனம் மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பிரித்தானிய அரசு இஸ்ரேலுடனான ஆயுத வர்த்தகத்தை முற்றிலுமாக
நிறுத்தக் கோரியும் ‘Palestine Solidarity Campaign’ உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின்
ஏற்பாட்டில் தொடர்ச்சியாக லண்டனில் இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

