அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐஸ் ஹொக்கி தகுதிப் போட்டிகள் இரத்து

அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹாக்கி சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகளை இரத்துச் ரத்துசெய்துள்ளதாகவும் அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.  உள்ளூர் காவல்துறையிடம்... Read more »

அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா

அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின்  நூற்றாண்டு விழா யாழில் இன்று நடைபெற்றது. மல்லாகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான அன்னையின்; திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை சென்றடைந்தது. ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.... Read more »
Ad Widget

இந்து மதகுரு மீது தாக்குதல்-அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார் கண்டனம்

இன்று (7)கனகாம்பிகை குளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்வு நோக்கத்திற்காக சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அப்பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவரினால் தாக்கப்பட்டு அவர் அணிந்திருந்த மாலையும் அறுத்தெறியப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காயப்பட்ட மதகுருவானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகன் வீதி ... Read more »

கிளிநொச்சியில் இருந்து கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில்... Read more »

16 வயது மாணவியை 4 நாட்களாகக் காணவில்லை

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை- அட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார். ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »

இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்

வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டதாக கூறப்படும் வினாத்தாள்கள் திருத்தப்படும் என அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,... Read more »

இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் : 3 புலிகள் பலி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன. இது குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசின்... Read more »

ஜனாதிபதி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய விரிவான விசாரணை – சி.ஐ.டி

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (06) கோட்டை நீதவான் நிலுபுலி லங்கா திலக்கவிடம் அறிவித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான தகவல்களை வழங்கி அதிகபட்ச தொகைக்கு மேல் ஜனாதிபதி நிதியைப் பெற்றுள்ளார்களா... Read more »

நிதிக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிப்பு

நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்க்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (07) ஆரம்பமான புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் கலாநிதி ஜகத்... Read more »

‘டிஜிட்டல் ID தயாரிக்கும் பணியை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவது ஆபத்து’

இலங்கைப் பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் அதிகாரத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் வகையில், மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த முதலிகேவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்தப்பட்ட இதற்கான... Read more »