ஜனாதிபதி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய விரிவான விசாரணை – சி.ஐ.டி

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (06) கோட்டை நீதவான் நிலுபுலி லங்கா திலக்கவிடம் அறிவித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான தகவல்களை வழங்கி அதிகபட்ச தொகைக்கு மேல் ஜனாதிபதி நிதியைப் பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: admin