“எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை”

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். போட்டியின் முடிவில் நேற்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... Read more »

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்... Read more »
Ad Widget

“எங்கள் தலைவர் சி.ன்.வா.ர் உயிருடன் இ.ரு.க்.கி.றா.ர் – இ.ஸ்.ரே.லி.ன் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹ.மா.ஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர்... Read more »

மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி !

மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி ! நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சட்டத்தரணி வி.மணிவண்ணண் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியானது தனித்து யாழில் போட்டியிடுகிறது. இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர்... Read more »

மனித உரிமை மீறல்கள்: உள்ளக பொறிமுறை ஊடாகவே விசாரணை

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக உள்ளக பொறிமுறை ஊடாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறைக்கு சர்வதேச மனித உரிமை பொறிமுறையின் ஆலோசனை பெறப்படக்கூடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத்... Read more »

புதிய கடன்கள் எதனையும் அரசாங்கம் பெறவில்லை: ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

அமைச்சுகளின் செலவினங்களைச் சமாளிக்கவும், திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறைகளை மீளச் செலுத்துவதற்கும் உள்ளூர் நிதிச் சந்தையில் இருந்து நிதி சேகரிக்கப்படுகிறதே தவிர புதிய கடன்களை பெற மாட்டோம் என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... Read more »

அரச பங்களாக்கள்: மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு

அரச பங்களாக்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீள ஒப்படைக்கவில்லையெனில், வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைசர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சு அரச நிர்வாக உள்துறை மாகாண சபைகள் மற்றும் தொழில் அமைச்சு இந்த... Read more »

206 முறைப்பாடுகள் இதுவரை பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 206 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளாக 206 முறைப்பாடுகள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை... Read more »

வரி ஏய்ப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை

பாரியளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட எட்டு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு முன்னர் இறுதிச் சந்தர்ப்பமாக ஞாபக மூட்டல்களை வழங்கியதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்தார். இவ்வாறு வரி ஏய்ப்பில் ஈடுபடும் குறித்த நிறுவனங்களை கடந்த தினங்களில் உள்நாட்டு... Read more »

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின்: 108 வாகனங்களை காணவில்லை!

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்கள் காணப்படும் நிலையில்,... Read more »