யுனெஸ்கோவின் 46ஆவது அமர்வுக்கு தலைமை தாங்கும் இந்தியா

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கவுள்ளதாக யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த ஆண்டில் (2024) ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை... Read more »

பருத்தித்துறையில் பேருந்து உரிமையாளர் மீது வாள் வெட்டு

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து பேருந்து உரிமையாளர் ஒருவரின் மீது இன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று அதிகாலையில்... Read more »
Ad Widget

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

கடந்து ஆண்டு இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு மொத்தம் 1,550 தொழுநோய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 173 வழக்குகள் பாடசாலை மாணவர்களிடையே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலிருந்து 315 வழக்குகளும் முறையே... Read more »

இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணம்: இலங்கை அணி அறிவிப்பு

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக சினேத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 15 வீரர்களுக்கு மேலதிகமாக இரு வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 19... Read more »

வற் வரி பொய் கூறினால் சட்டம் கடுமையாக்கப்படும்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் வற் செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றி நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட வற்... Read more »

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 142 இந்திய வீரர்கள்

2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 142 இந்திய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து தொடர்பான சோதனைகளில் சிக்கியுள்ளனர். இந்த தகவலை இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (NADA) தொகுத்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

இலங்கை வந்துள்ள ஐசிசி பிரதம நிறைவேற்று அதிகாரி

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி விதித்துள்ள தடைக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் (Geoff Allardice) இலங்கை வந்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் இன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்‍டோவை சந்தித்துள்ளார். இதன்போது, ஐசிசி தடையை... Read more »

ஜேர்மன் போக்குவரத்தில் அதிர்வலை

ஜேர்மனின் மூன்று நாள் நாடு தழுவிய ரயில் வேலைநிறுத்தம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சேவைகளின் இரத்து காரணமாக ஜேர்மன் முழுவதும் புதன்கிழமை (10) இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். GDL தொழிற்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரயில் சாரதிகளின் பாரிய அளவிலான வேலைநிறுத்தம்... Read more »

மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் கடும் வெள்ளப் பெருக்கு

இடைவிடாது பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியின் கல்லல்ல-மானம்பிட்டிய பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பொலன்னறுவை பராக்கிரம ஏரியின் வான்கதவுகள் பிற்பகல் இரண்டு மணியளவில் திறக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த... Read more »

யாழ்ப்பாண பல்கலையில் மலையக தியாகிகள் நினைவுதினம் அனுஷ்டிப்பு

மலையக தியாகிகள் நினைவுதினம் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்... Read more »