ஜேர்மன் போக்குவரத்தில் அதிர்வலை

ஜேர்மனின் மூன்று நாள் நாடு தழுவிய ரயில் வேலைநிறுத்தம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் சேவைகளின் இரத்து காரணமாக ஜேர்மன் முழுவதும் புதன்கிழமை (10) இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

GDL தொழிற்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரயில் சாரதிகளின் பாரிய அளவிலான வேலைநிறுத்தம் புதன்கிழமை (10) தொடங்கியது.

Deutsche Bahn ரயில்வே நிறுவனத்தின் தகவல்களின்படி, வெகுஜன வேலைநிறுத்தம் ஏராளமான ரயில் பயணங்கள‍ை இரத்து செய்ய வழிவகுத்தது.

இதனால் நாட்டின் போக்குவரத்து அட்டவணையில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

GDL தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தின் தொடக்கத்தை ஜனவரி 10 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இந்த தொழிற்சங்க நடவடிக்கையை புதன்கிழமை அதிகாலை 02:00 மணிக்கு தொடங்கி ஜனவரி 12 அன்று மாலை 18:00 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில், தற்போதைய சூழ்நிலையினை கருத்திற் கொண்டு, வேலைநிறுத்தம் முடியும் வரை தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு Deutsche Bahn பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவ‍ேளை, அந் நாட்டு விவசாயிகளும் மானியங்களை குறைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருவாரமாக வீதிகளை மறித்து போராட்டங்கள‍ை முன்னெடுத்து வருகின்றனர்.

GDL தொழிற்சங்கத்திற்கும் Deutsche Bahn க்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நவம்பர் 24 அன்று முட்டுக்கட்டையை எட்டின.

தொழிற்சங்கம் ஊதியங்களில் கணிசமான அதிகரிப்பு, பணவீக்கத்திற்கான இழப்பீடு மற்றும் வேலை வாரத்தை 35 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் என்று கோரியே இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin