2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 142 இந்திய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து தொடர்பான சோதனைகளில் சிக்கியுள்ளனர்.
இந்த தகவலை இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (NADA) தொகுத்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஸ்மிருதி மந்தனா, ரவீந்திர ஜடேஜா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிகிச்சை பயன்பாடு விலக்கு கோரியிருப்பதாக NADA தெரிவித்துள்ளது.
இதன்போது தடகளத்தில் அதிகபட்சமாக 49 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பளுதூக்கலில் 22 பேரும், மல்யுத்தத்தில் 17 பேரும் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்தக் காலக்கட்டத்தில் மொத்தம் 4342 வீரர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போட்டியில் பங்கெடுத்த 2596 பேரிடமும், போட்டிக்கு வெளியே 1746 பேரிடமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.