திருமலை எண்ணெய் குதங்கள் தனியார் நிறுவனத்துக்கு

திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் குதங்களில் 61 எண்ணெய் குதங்களை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் நிறுவனத்துக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2022.01.03ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு குறித்த எண்ணெய் குதங்களை வழங்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்... Read more »

சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக புத்தாண்டு அமைய வேண்டும்: இரா.சம்பந்தன்

பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டானது... Read more »
Ad Widget

14 வயது சிறுமியை கூட்டி சென்ற 18 வயது காதலன்

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (26) பதிவாகியுள்ளது. கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலைக்குச் செல்லும்... Read more »

நிலக்கடலைக்கு சந்தை வாய்ப்பு இல்லை: விவசாயிகள் கவலை

திருகோணமலையில் அமைந்துள்ள பாட்டாளிபுரத்தில் நிலக்கடலைக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைக்காததால் மிகவும் கஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த பிரதேசத்தில் வாழும் நிலக்கடலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இம்முறை நிலக்கடலை விவசாயமானது 150 ஏக்கருக்கு மேலே செய்யப்பட்ட நிலையில்... Read more »

தற்காலிகமாக மூடப்பட்டது புறா தீவு

வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் கடலில் சூறாவளி போன்ற தொடர் இன்னல்களால் திருகோணமலை நிலாவெளி தேசிய பூங்காவின் புறா தீவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. படகு மூலம் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த... Read more »

ஜனவரியில் திட்டமிட்டப்படி தமிழரசு கட்சி மாநாடு: எம்.ஏ. சுமந்திரன் தகவல்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் இன்று அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் இடம்பெற்றது. இக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

வங்குரோத்து நிலமையை மாற்ற புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துகிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வங்குரோத்து நிலமையை மாற்றியமைக்க இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமகால அரடியல் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை திருகோணமலை மல்லிகா விடுதியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்... Read more »

எனது ஆதரவாளர்கள் புறக்கணிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

கஞ்சா,போதை மாத்திரைகளுடன் பௌத்த பிக்கு கைது

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த பாடசாலை ஆசிரியரும் விகாரை ஒன்றின் விகாராதிபதியுமான பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர். ஆனதம்குளம சோமரதன என்ற இந்த பௌத்த பிக்கு 4 ஆம் கட்டை... Read more »

தமிழர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள்... Read more »