பழமையான மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..!
திருகோணமலையில் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பல மரங்கள் பிரதான வீதிகளில் இருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சில வேளைகளில் மக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதன் கிளைகள் வெட்டப்படலாம். ஆனால் உயிருடன் உள்ள மரங்கள் அடியோடு வெட்டப்படக்கூடாது. கிளைகள் வெட்டப்பட்ட மரங்கள் ஒட்டும் முறை மூலம் பாதுகாக்கவும், பயன்பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திருகோணமலை தபால் நிலைய வீதியின் பழைய சிகாரா தியேட்டருக்கு முன்னால் உள்ள பழைமைவாய்ந்த மரத்தின் ஒரு சில கிளைகள் மாத்திரம் இன்று (12.10.2025) வெட்டப்பட்டுள்ளது. அப்பகுதியின் ஊடாக 3 முக மின்னோட்டத்தை கொண்டு செல்ல வெட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஏனைய கிளைகள் வெட்டப்படாமல் மரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிய வருகின்றது.
எனவே நாம் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

