இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..!

இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..!

திருகோணமலை நகரில் இன்றைய தினம் (09.10.2025) காலை இவர்களை காணக் கிடைத்தது. நுவரெலியாவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 வருடங்களாக கிண்ணியாவில் வசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இயலாத மனைவியை சக்கர நாற்காலியில் ஏற்றிக் கொண்டு இருவரும் வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.

 

உண்மையிலேயே முயற்சிக்கு இவர்களும் முன்னுதாரணம். உண்மையான முயற்சியாளர்களுக்கு நாமும் பங்களிப்பு செய்ய வேண்டியது அவசியம். இவர்கள் புதிய சக்கர நாற்காலிக்காக பல கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை அது கிடைக்கவில்லை என ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

இது தொடர்பில் பிரதேச செயலகம், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் தன்னார்வ தொண்டர் அமைப்புகள் கவனம் செலுத்தினால் இவர்களின் முயற்சிக்கு உதவ முடியும்.

Recommended For You

About the Author: admin