மன்னாரில் திருடப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் பொலிஸாரினால் மீட்பு.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும். பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் பெண்கள் வலையமைப்பின் ஊடக மாநாடு.(video)

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில். இன்றைய தினம்(15.03) சனிக்கிழமை மன்னார்  மாவட்ட பெண்கள் வலையமைப்பினால், ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது. கடந்த (10) அனுராதபுரம் வைத்திய சாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும்... Read more »
Ad Widget

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐந்து சபைகளில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மன்னார் நகரசபை உட்பட நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக  இன்றைய தினம் (14.03) வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

மன்னார் பிரதேச சபையிலும் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி(video) .

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் பிரதேச சபையிலும் போட்டியிடுவதற்குத் தேசிய  மக்கள் சக்தி கட்சி  இன்றைய தினம்  (14.03) வெள்ளிக்கிழமை காலை, மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. மன்னார் நகர சபை நானாட்டான்  பிரதேச சபை,முசலி பிரதேச சபை மாந்தை... Read more »

பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல்.

CMEV நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மன்னாரில்  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தேர்தலில், இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பது பற்றியும் வடக்கு கிழக்கில் மக்களுடைய தேர்தல் சம்பந்தமான அறிவும் அது தொடர்பான ஈடுபாடும்... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நான்கு சபைகளில் களமிறங்கும் NPP(video)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம்   (12.03) புதன்கிழமை மதியம் மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச... Read more »

மன்னாரில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டு சபைகளில் சுயேட்சையாகப் போட்டியிடும்  இளைஞர் குழு!  

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட, இன்றைய தினம்(11.03) செவ்வாய்க்கிழமை   இளைஞர் குழு ஒன்று மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம்.சீலன் தலைமையிலான  இளைஞர் குழுவினரே, மன்னார் நகர... Read more »

மன்னாரில் மாபெரும் தொழிற்சந்தை (video)

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக் களத்துடன் இணைந்து மன்னார் மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் தொழிற்சந்தையானது இன்றைய தினம் (11.03) செவ்வாய் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினை இலகுவாக பெற்றுக் கொள்வதற்காகவும் தொழில்... Read more »

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வட,கிழக்கின் அனைத்து சபைகளிலும் போட்டியிட உள்ளோம்-செல்வம் எம்.பி!(video)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட வுள்ளதாக ஜனநாயக... Read more »

தொடரும் இந்திய மீனவர்களின் கைது.

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றிரவு(06) கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில்... Read more »